மத அறிவை புத்தகவழி மட்டுமே பரிமாற்றுவதற்கான அவசியமில்லை

அறிவுக்கான தேடுதலை மிகப்பெரிய அளவில் உடைய நாகரிகம் நமது நாகரிகம். அவர்கள் உள் மற்றும் வெளி உலகின் அறிவை தேடுகிறார்கள். ஹிந்து மதத்தைப் போல் மற்றொரு மதம் கிடையாது. இது அறிவுசார் பாரம்பரியங்களின் ஒரு முழுமையான தொகுப்பாகும். இதுதான் நாம். இப்பகுதிகளுக்கிடையே மிகப்பெரிய பண்பாட்டு இடைப்பரிமாற்றம் நடந்தேறியது. அடிப்படையாக நாம் அறிவுசார் பாரம்பரியத்தை சார்ந்தவர்கள். இவை பலவகையில் பரிமாற்றம் செய்யப்பட்டது ஏனெனில் அறிவை புத்தகவழி மட்டுமே பரிமாற்றுவதற்கான அவசியமில்லை. உங்கள் மகனுக்கு வண்டி ஓட்ட கற்றுக்கொடுக்கிறீர்கள். இதற்கு அவனிடம் புத்தகம் குடுப்பீர்களா? கற்றுக்கொடுப்பதிற்கு பல வழிமுறைகள் உண்டு, இதில் புத்தகம் ஒரு வழிமுறை ஆனால் அது மட்டுமே வழியில்லை. அது கண்டிப்பாக அதிகாரபூர்வமான வழியில்லை. இன்றைக்கும் மனிதர்கள் அடிப்படையாக புத்தகவழி கற்றுக்கொள்வதில்லை. மாறாக அவர்கள் கவனித்தல், பல முறை செய்தல், முன்மாதிரியை போல் செய்தல், பார்த்து பின்பற்றுதல். இது இயற்கையான வழி.

Translation credits: Priya Darshini C N

Leave a Reply